"1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத மக்கள்..." - விஜய்க்கு ஃபெஃப்சி வாழ்த்து!

May 05, 2026 - 15:30
0
"1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத மக்கள்..." - விஜய்க்கு ஃபெஃப்சி வாழ்த்து!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்றிருக்கிறது தவெக.

இதனையடுத்து, தமிழ் திரையுலகினர் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அந்த அறிக்கையில், "தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் உங்களுடைய மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களின் வெற்றி ஒரு நுாற்றாண்டின் வெற்றி. கடந்த 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்திடாத மாபெரும் சாதனையை தாங்கள் செய்துள்ளீர்கள். கடந்த 75ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் ஏதோ ஒரு கூட்டணி வைத்தே வெற்றி பெற்று உள்ளது.

தனி ஒரு கட்சியாக இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை. தமிழகத்தில் இந்த மாபெரும் சாதனை புரிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

1000, 5000 என பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் வாக்களிக்காத, தமிழக மக்கள் பணமே கொடுக்காமல் உங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை அளித்திருக்கிறார்கள்.

தங்களின் வெற்றி நிச்சயமாக தமிழக சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது என்றே கூற வேண்டும். தங்களின் வேட்பாளர்கள் பலர் பரிச்சயம் இல்லாதவர்கள், ஒரு சிலர் பொதுமக்களிடம் வாக்குக்கூட சென்று சரியாக கேட்காதவர்கள்.

ஆனால் வாக்கே கேட்காமல், பணம் ஏதும் கொடுக்காமல் ஒன்றரை கோடி மக்கள் உங்களுக்கு வாக்குகளை செலுத்தி உள்ளார்கள் என்றால் தங்கள் மீது மக்களுக்கு, உள்ள நம்பிக்கையும், தாங்கள் ஒரு நல்லாட்சியை தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு, இந்த அதீத எதிர்ப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் காத்திட வேண்டும்.

FEFSI - TVK Vijay
FEFSI - TVK Vijay

தமிழகத்திற்கு ஒரு நல்ல ஆட்சியை நீங்கள் சொன்னது போல, ஒரு துாய ஆட்சியை தந்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொண்டு உங்களுக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் 25ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களின் சார்பில் எங்களுடைய சகோதரன் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User