நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

Mar 13, 2026 - 13:02
 0
நெல்லை: `மனைவி மீது சந்தேகம்' - தலையைத் துண்டித்து சாலையில் வைத்த கொடூர கணவன்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர்  முத்துப்பட்டன். கட்டிடத் தொழிலாளியான இவரது மனைவி சுதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுதாவின் நடத்தையில் முத்துப்பட்டனுக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி நீண்ட நேரம் போனில் பேசிக் கொண்டே இருந்தாராம் சுதா.

கொலை செய்யப்பட்ட சுதா- முத்துப்பட்டன்

யாரிடம் பேசுகிறாய் என முத்துப்பட்டன் கேட்டத்ற்கு சரியான பதில் கூறவில்லையாம். இதுகுறித்து சுதாவிடம் கண்டித்துக் கூறியும் அவர் கேட்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு போன் பேசி வந்தது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த முத்துப்பட்டன் சுதாவின் தலையை கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார். அத்துடன் தலையை சாலையில் வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுதகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சுதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையம்

மேலும், முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது உள்ள சந்தேகத்தால் கணவன் மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0