``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" - ஒற்றை ஆளாக நதியை சுத்தம் செய்த பிட்டு ஆதங்கம்!

Oct 14, 2026 - 16:30
0
``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" - ஒற்றை ஆளாக நதியை சுத்தம் செய்த பிட்டு ஆதங்கம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தபாஹி (Bittu Tabahi), கடந்த ஜனவரி 26 அன்று நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உட்படப் பல பிரபலங்கள் இவரது சேவையைப் பாராட்டித் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

பிட்டு தபாஹி
பிட்டு தபாஹி

இந்நிலையில், பிட்டு தபாஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ``என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது" எனப் பதிவிட்ட புதிய வீடியோ ஒன்று பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நதியின் கரைகளை அவர் முழுமையாகச் சுத்தம் செய்து முடித்துச் சில வாரங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் அந்த நதி முழுவதிலும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள் மற்றும் பூக்கள் மிதந்து நதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பிட்டு தபாஹி கையில் ஒரு ஆரஞ்சு நிறக் கம்புடன் கலங்கலான ஆற்று நீரில் இறங்கி, நீரில் மிதக்கும் சாமந்திப் பூக்கள், பிளாஸ்டிக் உறைகள் மற்றும் தெர்மோகோல் கழிவுகளை வெளியேற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தான் ஆற்றைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே, சிலர் தனக்கு முன்னாலேயே கழிவுகளை ஆற்றில் கொட்டிச் சென்றதாகவும், நதிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்பு வசதிகளைச் சிலர் சேதப்படுத்தி நீரில் தூக்கி வீசியதாகவும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நதியை எவ்வாறு நிரந்தரமாகவும் திறம்படவும் தூய்மைப்படுத்துவது என்பது குறித்துத் தனது Followers களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "சோர்ந்துவிடாதீர்கள்" என்று பிட்டு தபாஹிக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், உள்ளாட்சி நிர்வாகமும் அப்பகுதி மக்களும் நதியைப் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டுவது ஏன் என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

பிட்டு தபாஹி
பிட்டு தபாஹி


இந்தியாவில் உள்ள சிறு நகரங்களில் நதிகளையும் வடிகால்களையும் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்தும் அவல நிலை தொடர்வதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது. முறையான கழிவு மேலாண்மை, கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு இல்லையெனில், தனிநபரின் உழைப்பு மட்டும் இதுபோன்ற மாற்றங்களை நிலைநிறுத்த முடியாது என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது. இதனிடையே, ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது குறித்தோ அல்லது ஆற்றைச் சுத்தம் செய்வது குறித்தோ உள்ளாட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User