Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

Sep 10, 2026 - 21:00
0
Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Mandadi
Mandadi

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து சென்னை ரோகிணி திரையரங்கில் சூரி பார்த்திருக்கிறார். இதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்து அவர் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், "இந்தப் படத்துக்காக வேலை செய்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தப் படத்துக்காக நாங்க நிறைய மெனக்கெட்டோம்.

தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், இந்த 'மண்டாடி' டீம் எல்லாருக்கும் மிகப்பெரிய வெற்றி. கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதான் இப்போது கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.

இந்தப் படம் வெற்றி பெறும்னு மன உறுதியோடத்தான் பல மாதங்களாகக் கடலில் கிடந்தோம், கஷ்டப்பட்டோம். 'கஷ்டப்பட்டோம்ங்கிற வார்த்தையைச் சொல்லாதீங்க'னு நிறைய பேர் சொன்னாங்க.

நடிகர் சூரி
நடிகர் சூரி

ஆனால், உண்மையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டதால்தான் இந்த வார்த்தையைச் சொன்னோம். ஆனால், அது எல்லாத்துக்குமே இன்னைக்குப் பலன் கிடைச்சிருக்கு.

இந்த 'மண்டாடி' படத்துக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பைப் பார்த்தோம். படத்தைப் பற்றி நல்லாவே பேசுறாங்க. தியேட்டர்ல படத்தை அவ்வளவு கொண்டாடுறாங்க.

இந்தப் படத்தோட ஒட்டுமொத்த வெற்றியையும் கடலோர மீனவர்கள், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என எல்லாருக்கும் 'மண்டாடி' படத்தை சமர்ப்பிக்கிறோம். ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User