மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்?

Jun 18, 2026 - 13:01
0
மதுரை: கெட்டுப்போன 1200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்; ஊசிகள் பயன்படுத்தியது ஏன்?

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் ( 57) என்பவர் மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் கெட்டுப் போன ஆடு, கோழி இறைச்சிகளை விற்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்து.

இதை எடுத்து மோயிசன் மட்டன் கடையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்தச் சோதனையில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முறையாகப் பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உட்பட மொத்தம் 1200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்து அதன் மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி அழித்தோடு கடைக்கு சீல் வைத்தனர்.

ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாகவும் அந்த ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User