Labham: இறக்குமதி வரியால் விலை உயர்ந்த தங்கம்... இனி எப்படி வாங்கினால் அதிக லாபம்?
தங்கத்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசாங்கம் 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவித்திருக்கிறது. இதனால் தங்கம் விலை 13-ஆம் தேதி அன்று மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.1070 அதிகரித்திருக்கிறது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.8500-க்கும் அதிகமாக உயர்ந்து, ரூ.123200-ஆக உயர்ந்திருக்கிறது.
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து, 'தங்கம் விலை இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டதே, இனி நம்மால் தங்கத்தை வாங்க முடியுமா?' என்று யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில், இனி தங்கத்தை எப்படி வாங்கினால் லாபம் பெறலாம் என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கான பதில் இதுதான்...
தங்கத்தை இனி எப்படி வாங்கினால் லாபம் கிடைக்கும் என்கிற கேள்விக்கான பதிலைப் பார்க்கும்முன், தங்கத்துக்கான இறக்குமதி வரியை இப்போது ஏன் மத்திய அரசாங்கம் உயர்த்தி இருக்கிறது என்று பார்ப்போம்.

அமெரிக்க - ஈரான் போர் மூண்டபிறகு கச்சா எண்ணெய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காரணம், உலக நாடுகளுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி வளைகுடா நாடுகளில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது. ஈரான் தன் நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஹோர்மூஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடிவைத்திருப்பதால், கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இந்தக் கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரைத் தந்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், அதிகளவில் ரூபாயைத் தந்துதான் அமெரிக்க டாலரை இந்திய அரசாங்கம் வாங்கி, அதனைக்கொண்டுதான் கச்சா எண்ணெயை வாங்க வேண்டி இருக்கிறது.
அமெரிக்க டாலரின் அதிக மதிப்பு காரணமாக, கச்சா எண்ணெய் மட்டுமல்ல, தங்கத்தையும் அதிக விலை தந்துதான் மத்திய அரசாங்கம் வாங்கவேண்டி இருக்கிறது. இதனால்தான் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கும் வகையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது.
உலக நாடுகளில் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவின் தங்க இறக்குமதி ஓர் ஆண்டுக்கு சுமார் 800 டன் என்கிற அளவில் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகத் தங்க இறக்குமதி குறைந்து வந்தாலும் அது இன்னும்கூட 650 டன்னுக்கு மேலேதான் இருக்கிறது. எனவே, தங்க இறக்குமதியைக் குறைக்க இறக்குமதி வரி அதிகரிப்பது போன்ற நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.
உலக நாடுகளில் தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவின் தங்க இறக்குமதி ஓர் ஆண்டுக்கு சுமார் 800 டன் என்கிற அளவில் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாகத் தங்க இறக்குமதி குறைந்து வந்தாலும் அது இன்னும்கூட 650 டன்னுக்கு மேலேதான் இருக்கிறது. எனவே, தங்க இறக்குமதியைக் குறைக்க இறக்குமதி வரி அதிகரிப்பது போன்ற நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தங்கத்தை நகையாக வாங்க வேண்டும் எனில், அதிக விலை தந்துதான் வாங்க வேண்டும். அப்படி அதிக விலை தந்து இப்போது தங்கம் வாங்க விரும்பவில்லை என்கிறவர்கள், எப்படித் தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தங்கம் இப்போது விற்கும் விலையில் அதை தங்க நகையாக வாங்க விரும்பாதவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் தங்கத்தை வாங்கலாம். இதை இ.டி.எஃப் மூலமாகவும் வாங்கலாம். அல்லது கோல்டு சேவிங் ஃபண்ட் திட்டங்களாகவும் வாங்கலாம். இதன் மூலம் தங்கத்தை இன்றுள்ள விலைக்கு வாங்க முடியும். இதை எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விற்கிறோமோ, அன்று தங்கம் என்ன விலைக்குப் போகிறதோ, அந்த விலை நமக்குக் கிடைத்துவிடும். உதாரணமாக, இன்று தங்கம் விலை ரூ.14,500 எனில், நீங்கள் ரூ.14,500 தந்து ஒரு யூனிட்டை வாங்கிக் கொள்ளலாம். ரூ.14,500 இல்லை என்கிறவர்கள் அதைவிடக் குறைவான பணத்தைத் தந்து, அதற்கேற்ற அளவு யூனிட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்குப்பிறகு தங்கம் விலை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு லாபம் கிடைக்கும்.
இப்படித் தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்கிற வகையில் பண இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிகிறது. தவிர, தங்கத்தைக் காகித வடிவில் வாங்குவதால், அதை மிகப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீண்ட காலத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கட்டி, கஷ்டப்படாமல் அதிகளவில் தங்கம் சேர்க்க விரும்புகிறவர்கள் கோல்டு சேவிங் ஃபண்ட் மூலம் ஓரளவுக்கு நிறையவே தங்கம் சேர்க்க முடியும். இதனால்தான் இன்றைக்குப் பலரும் கோல்டு சேவிங் ஃபண்ட் திட்டங்கள் மூலம் பலரும் தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
இன்றைய நிலையில், தங்கத்தை அதிக விலை தந்து வாங்க விரும்பாதவர்கள், கோல்டு சேவிங் ஃபண்ட் திட்டங்கள் மூலம் தங்களால் முடிந்த அளவு பணம் சேர்த்து, தங்கத்தை சேர்க்கலாமே?


லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamilஉங்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டுமா? நிதிச் சுதந்திரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை நீங்களும் பார்த்து பயன் பெற வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்து, வீடியோவைப் பாருங்கள்...
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)