"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

Jun 17, 2026 - 13:32
0
"அந்தப் புத்தகத்தைக் கொடுக்கத்தான்" - ரஜினியுடனான சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் விளக்கம்

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜூன்.16) சந்தித்தார்.

பிரதமர் மோடி​யின் 12 ஆண்​டு​கால சாதனை​கள் குறித்த சிறப்புப் புத்​தகங்​களை ரஜினி​காந்த்திற்கு நயினார் நாகேந்திரன் வழங்​கினார்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியானது.


நயினார் நகேந்திரன்- ரஜினி சந்திப்பு
நயினார் நகேந்திரன்- ரஜினி சந்திப்பு

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், "பிரதமரின் சாதனை விளக்க புத்தகத்தை ரஜினியிடம் வழங்கத்தான் அவரை நேரில் சந்தித்தேன். நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை.

ரஜினி படத்தைப் பயன்படுத்தி போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதைப் பார்த்துவிட்டு ரஜினியே நான் எந்தக் கட்சியிலும் இல்லை என்று கூறிவிட்டார்.

அவர் எந்தக் கட்சிக்கும் வரமாட்டார் என்று தான் நினைக்கிறேன். நான் ரஜினியைச் சந்தித்ததில் எந்த விதமான அரசியல் நோக்கமும் கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User