Iran: "நண்​பர் ட்ரம்ப் அழைத்​தார்; அமெரிக்கா - ஈரான் போர் குறித்து ஆலோசித்தோம்" - பிரதமர் மோடி பதிவு

Apr 15, 2026 - 12:03
 0
Iran: "நண்​பர் ட்ரம்ப் அழைத்​தார்; அமெரிக்கா - ஈரான் போர் குறித்து ஆலோசித்தோம்" - பிரதமர் மோடி பதிவு

ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

மத்திய கிழக்குப் போர் சூழல் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அமெரிக்க அதிபரும் எனது நண்​பரு​மான டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்​தார்.

பல்​வேறு துறை​களில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து ஆலோ​சித்​தோம். சர்வ​தேச விவ​காரங்​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்படு​வது குறித்து உறுதி மேற்​கொண்​டோம்.

மேற்கு ஆசியா நில​வரம் குறித்​தும் (அமெரிக்​கா- ஈரான் போர்) ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் பாது​காப்​பான, தடையற்ற கப்​பல் போக்கு​வரத்தை உறுதி செய்​வது குறித்​தும் ஆலோ​சனை நடத்​தினோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர், "அமெரிக்​கா, ஈரான் இடையி​லான மோதலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க பல்​வேறு நாடு​கள் முயற்சி செய்து வரு​கின்​றன.

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

அந்த நாடு​களின் சமரச முயற்​சியை அமெரிக்கா வரவேற்​கிறது. இதே​போல இந்​தி​யா​வின் சமரச முயற்​சி​யை​யும் நாங்​கள் முழு ​மனதுடன் வரவேற்​கிறோம்.

அதிபர் ட்ரம்​பும் பிரதமர் மோடி​யும் செவ்​வாய்க்​கிழமை 40 நிமிடங்​கள் பேச்சுசுவார்த்தை நடத்​தினர். அப்​போது ஈரான் போர் மற்​றும் இந்​தி​யா-அமெரிக்கா இடையி​லான வர்த்​தகம் குறித்து முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது’’ என்​று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0