காவல் மரணம்: "ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்கவில்லை என்றால் அரசே அடக்க செய்யும்" - நீதிபதி கெடு விதிப்பு

Jun 16, 2026 - 10:01
0
காவல் மரணம்: "ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்கவில்லை என்றால் அரசே அடக்க செய்யும்" - நீதிபதி கெடு விதிப்பு

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். 

போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன் நீதிமன்ற நடுவரிடம் ஆகாஷ் டெலிசன் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் தன்னுடைய காலை உடைத்ததாகக் கூறியிருந்தது, தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து இறப்பிற்குக் காரணமான காவல்துறையினரைக் கைது செய்யும் வரை ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றொர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ''விசாரணை அதிகாரி, முடிந்தவரை விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 ஆகாஷ் டெலிசன்,  ராஜேஷ்கண்ணன்
ஆகாஷ் டெலிசன், ராஜேஷ்கண்ணன்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியாக கௌரி, "மனுதாரர் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது வரை, உடலை பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இறந்தவருக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். ஆகவே ஆகாஷின் பெற்றோர் இன்று மாலை 5 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறினால் நாளை காவல்துறையே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து ஆகாஷ் டெலிசனின் பெற்றோர்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User