`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

Sep 25, 2026 - 19:30
0
`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலமாக மர்மநபர் ஒருவர் `கிரிப்டோகரன்சி முதலீட்டீல் அதிகம் சம்பாதிக்கலாம்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தனது பேராசைக்கு போடப்பட்ட மோசடித் தூண்டில் எனத் தெரியாமல் கிரிப்டோ மோசடிப் பேர்வழியிடம் பேச்சுக் கொடுத்து பழகியுள்ளார் பிரதீப்குமார். இந்த நிலையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுமாறு அந்த மர்ம நபர், பிரதீப்குமாரின் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பிரதீப்குமார் ரூ.4.92 லட்சத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். சில வாரங்கள் கழித்து முதலீட்டுக்கான லாபத் தொகையை பிரதீப்குமார் கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மோசடிப் பேர்வழி சுதர்சன்

மோசடிப் பேர்வழியும் பணம் தருவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். பிரதீப்குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் `கிரிப்டோகரன்சி முதலீட்டில் லாபம் கிடைக்கவில்லை. உங்கள் பணம் லாஸ் ஆகிடுச்சு’ என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பிரதீப்குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார், எஸ்.ஐ சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கிரிப்டோ மோசடிப் பேர்வழி ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்த சுதர்சன் (32) எனத் தெரியவந்தது. ராணுவத்தில் பணிபுரிந்து வந்த சுதர்சன் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து கம்ப்யூட்டர் சென்டர் கடை நடத்தி வந்துள்ளார். இதையடுத்து, சுதர்சனை போலீஸார் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User