குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

Jun 15, 2026 - 15:30
0
குழந்தை பாலியல் வன்கொடுமை: 'இந்தச் சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்' காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டு உயிரிழந்த கொடூரச் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று (ஜூன்.14) மாலை 3 வயது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடி உள்ளனர்.

அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தையைப் பார்த்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

குழந்தை பாலியல் வன்கொடுமை| Represental images
குழந்தை பாலியல் வன்கொடுமை| Represental images

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அக்குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Represental images
Represental images

இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User