பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

Aug 07, 2026 - 18:31
0
பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால் எதிர்கால ஐபிஎல் ஏலங்களில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது.

முகமது அமீர்
முகமது அமீர்

2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அமீர், தனது வேகம், ஸ்விங் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றார். குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

IPL-ல் அமீரை பார்க்க முடியுமா?

முகமது அமீர் தனது மனைவி நர்ஜிஸ்கானின் மூலம் நீண்டகால முயற்சிக்கு பிறகு பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதால், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் தொடரில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடும் அமீர், ஐபிஎல்லில் விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

முகமது அமீர்
முகமது அமீர்

எனினும், பிரிட்டன் குடியுரிமை கிடைத்திருப்பது மட்டுமே ஐபிஎல் வாய்ப்பை உறுதி செய்யாது. ஏலத்தில் எந்த அணி அவரைத் தேர்வு செய்கிறது, மேலும் BCCI-யின் நடைமுறைகள் என்ன என்பதே, அவரது ஐபிஎல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒருகாலத்தில் பாகிஸ்தானுக்காக உலகை மிரட்டிய வேகப்பந்துவீச்சாளர், வரும் காலங்களில் ஐபிஎல்லில் களமிறங்குவாரா? என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User