Bigg Boss 10: மூன்று Tier-ல் சம்பளம்... யாருக்கு எவ்வளவு தெரியுமா?!
விஜய் டிவியில் ஒரு மாதத்தைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 10. நிகழ்ச்சியின் பத்தாவதாண்டு என்பதால் எவிக்ஷன், வைல்டு கார்டு என்ட்ரி எதையெடுத்தாலும் டபுள், ட்ரிபுள் என நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு நிகழ்ச்சியிலும் இல்லாத புதுமையாக ஒரு நாள்கூட பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லாமலேயே போட்டியாளர்கள் எலிமினேட் ஆனதெல்லாம் நடந்தது.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசனின் போதும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்களை விகடன் வெளியிட்டு வந்திருப்பதை அறிவீர்கள்.
பத்தாவது சீசன் போட்டியாளர்களைப் பொறுத்தவரை மூன்று விதமான அளவு கோலில் படி ஊதியம் பேசப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 35,000 முதல் 40,000 வரை ஒரு கேட்டகிரி. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சிலருக்கு. மூன்றாவதாக 10,000 முதல் 20,000 வரை. காமன் மேன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிக்பாஸ் வந்த போட்டியாளர்கள் பலருக்கு இந்த அடிப்படையில் ஊதியம் தரப்பட்டதாகத் தெரிகிறது.

லக்ஷ்மி பிரியா முதல் ராகவ் வரை!
நடிகை லக்ஷ்மி பிரியா, நடிகர் வினோத், ராகவ் ஆகியோர் டிவியின் பிரபலமான முகங்கள் மற்றும் சின்னத்திரையில் பல ஆண்டு அனுபவம் கொண்டவர்கள். எனவே இவர்கள் முதல் கேட்டகிரியில் வருகிறார்களாம். அதாவது நாளொன்றுக்கு 35 முதல் 40 ஆயிரம் ரூபாய் இவர்களுக்கான சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

நல்ல சம்பளம், நாள்தான் இல்ல!
மாதம் முப்பதாயிரம் ரேஞ்சில் ஊதியம் பேசப்பட்ட அடுத்த வரிசை சீனியர்கள் என்றால் நடிகை ஆனந்தி மற்றும் நடிகர் பிளாக் பாண்டி. ஆனால் இவர்களில் நடிகர் பிளாக் பாண்டி சென்ற ஒரு சில தினங்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். உடல்நலனில் பிரச்னை எனச் சொல்லப்பட்டது. ஒரு வாரம்கூட பிக்பாஸ் வீட்டில் தங்கவில்லை. எனவே அங்கு இருந்த நாள்களுக்கான சம்பளம் மட்டும் அவருக்கு வழங்கப்படுமென்கிறார்கள்.
ஆனந்தி ஒரு வாரம் கழித்தே நிகழ்ச்சிக்குள் சென்றார். அதேபோல சென்ற மறு வாரமே அவரது தந்தை இறந்துவிட, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார். எனவே இவருக்கும் கலந்து கொண்ட நாள்களைக் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படுமாம்.

சம்பளம் மற்றும் பணப்பெட்டி!
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் என ஒரு டாஸ்க் இருக்கும். நிகழ்ச்சியின் கடைசிக் கட்டத்தில் பணப்பெட்டியை வைப்பார்கள். அதில் சேர்ந்த தொகையை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பும் போட்டியாளர்கள் வெளியேறலாம். இந்த சீசனில் அதையும் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதமே முடிந்த நிலையில் கொடுத்து விட்டார்கள். கடந்த வாரம் நடந்த அந்த டாஸ்கில் கலந்து கொண்டு பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார் நடிகர் குமரன். அவருக்கு பணப்பெட்டியில் இருந்த ஐந்து லட்சத்துடன் நாளொன்றுக்கு முப்பதாயிரம் கணக்கில் இருந்த நாள்களைக் கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுமெனச் சொல்லப்படுகிறது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல!
நடிகை ஷப்னத்திற்கும் 35 டு 40 ஆயிரம் ரேஞ்சில் சம்பளம் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் முதல் நாளிலேயே அவர் எவிக்ட் ஆகி விட்டதால் சம்பளம் ஏதும் வாங்காமலேயே வெளியேறி இருக்கிறார்.
போட்டியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் சம்பளமும் கணிசமாக உயர்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)