"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

Sep 11, 2026 - 15:01
0
"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்பு அந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு என்னுடைய சினிமா பயணமே பாதிக்கப்பட்டது.

இப்போது நான் சொல்வது தவறாகக்கூட இருக்கலாம். அந்தப் படத்துக்குப் பின் எனக்கு பட வாய்ப்பு கொடுக்கூட பலரும் பயந்தார்கள்.

‘King of Kotha’
‘King of Kotha’

அந்த அளவுக்கு ’King of Kotha’ படம் ட்ரோல் செய்யப்பட்டது. பொழுதுபோக்கிற்காக பலரும் அந்தப் படத்தைக் கிண்டல் செய்தனர். அதன் பாதிப்பு எனக்கு மட்டுமல்ல, துல்கர் சல்மானும் கூட ட்ரோல் செய்யப்பட்டார்.

குறிப்பாக, படத்தில் நான் துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ‘ராஜு யேட்டா’ என்று அழைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது.

அந்தப் படத்தில் எனக்கு அதிகப்படியாக இருந்த வசனம் ‘ராஜு யேட்டா’தான். இதன் பாதிப்பு நான் அடுத்து நடித்த ‘Hello Mummy’ படப்பிடிப்பின்போதுகூட தொடர்ந்தது.

அந்தப் படத்தின் உதவி இயக்குநர் ஒருவர், ‘ராஜு யேட்டா’ என்ற பெயரைவைத்து என்னை கிண்டல் செய்தார், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததது.

இந்தப் பாதிப்பின் காரணமாக, துல்கருடன் இணைந்து ஓணத்துக்காக ஒரு விளம்பரப் படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, நான் மறுத்துவிட்டேன்.

ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

‘கிண்டல்கள் தீவிரமாக இருக்கிறது, இப்போது நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்பது சரியாக இருக்காது’ எனக் கூறினேன். இந்த அனுபவத்திற்குப் பிறகு, இனி துல்கர் சல்மானுடன் என்னால் மீண்டும் பணியாற்ற முடியுமா? என்றுகூட தெரியவில்லை.

எங்களுடையது பொதுமக்கள் முன்னிலையில் இருக்கக்கூடிய ஒரு துறை. இதில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் மிக முக்கியம்.உங்களது கடைசிப் படத்தின் வெற்றியோ, தோல்வியோதான் இங்கு முக்கியம்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User