ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கப்பல்; தாக்குதல் நடத்திய ஈரான்| Live Updates

Jun 26, 2026 - 09:01
0
ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கப்பல்; தாக்குதல் நடத்திய ஈரான்| Live Updates

சிங்கப்பூர் கப்பலைத் தாக்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது.

Represental images
சிங்கப்பூர் கப்பலைத் தாக்கிய ஈரான்|Represental images

இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்தியக் கப்பலை ஈரான் ராணுவம் தாக்கி இருக்கிறது. தாங்கள் அங்கீகரித்த வழித்தடத்தை மட்டுமே கப்பல்கள் பயன்படுத்த வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதனால் நீரிணையை கடக்காமல் பல்வேறு கப்பல்கள் பின்வாங்கியுள்ளன.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து மக்களோடு மக்களாகவும் பங்கேற்றிருக்கிறார்.

சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரியவில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து, "நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்;

போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்;

மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்’’ என்று முதலமைச்சர் விஜய் தலைமையில் மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User