வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

Sep 17, 2026 - 13:32
0
வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு; கடித்துக் குதறி எஜமானர் குடும்பத்தைக் காப்பாற்றிய வளர்ப்புப் பூனை

வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை, காதல் பறவைகள், புறாக்கள், அணில்கள், அலங்கார வண்ணமீன்கள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார்கள்.

இவற்றில் குறிப்பாக நாய்கள் வீட்டுக் காவலுக்கும், பூனைகள் எலிகளைக் கட்டுப்படுத்தவும் வளர்த்து வருகிறார்கள். வீட்டுக் காவல், எலிகள் கட்டுப்பாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி வீட்டு மனிதர்களுடன் பாசப் பிணைப்போடும், விசுவாசத்தோடும் பழக்கூடியவை.  

ஆபத்தான நேரங்களில் எஜமானர்களைக் காக்கக்கூடிய உள்ளுணர்வும், தைரியமும் இவைகளுக்கு இயற்கையாகவே அதிகம் உண்டு. இதை மெய்ப்பிக்கும் வகையில் நெல்லையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விஷப்பாம்பினை கடித்து கொன்ற பூனை
விஷப்பாம்பினை கடித்து கொன்ற பூனை

நெல்லை டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர், தனது வீட்டில் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.  

இந்த நிலையில் உசேன்பாபுவின் வீட்டு மெயின் வாசல் வழியாக 2 அடி நீளமுள்ள விஷப்பாம்புவின் குட்டி ஒன்று நுழைந்து கதவின் மீது ஏறிக் கொண்டிருந்தது. வீட்டில் இருந்தவர்கள் இதை யாரும் கவனிக்காத நிலையில், வளர்ப்புப் பூனை இந்தப் பாம்பினைப் பார்த்து உரத்த குரலில் ஆக்ரோஷமாக “மியாவ்” சத்தத்தை எழுப்பியது.

பூனையைத் தேடி வந்தவர்கள் பூனைக் கதவினை நோக்கி உரத்த குரல் எழுப்பியதைப் பார்த்தனர். அப்போது விஷப்பாம்பினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உசேன்பாபு, பாம்பினைப் பிடிக்க முயன்றபோது சீறியது.

உடனே சற்றும் தாமதிக்காமல் அந்தப் பூனை பாய்ந்து சென்று கடித்து குதறியது. சிறிது நேரத்தில் பாம்பும் இறந்தது. இந்தக் காட்சியை பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்ப்போன்களில் பதிவு செய்திருந்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கதவில் ஏறி நின்ற பாம்பு
கதவில் ஏறி நின்ற பாம்பு

”எங்கள் வீட்டுப் பூனை கடித்துக் குதறி கொன்ற பாம்பு கட்டுவீரியன். மிகவும் கொடிய விஷமுள்ள பாம்பு. குட்டி பாம்புவிற்கும் விஷம் உண்டு. எங்கள் வீட்டிலும், அருகிலுள்ள வீடுகளிலும் சிறு குழந்தைகள் உள்ளது. கடித்திருந்தால் என்ன ஆயிருக்கும். இந்த நேரத்தில் எங்கள் வளர்ப்புப் பூனைக்கு நன்றி சொல்லவே கடமைப் பட்டிருக்கிறோம்” என நெகிழ்ச்சியுடன் கூறினர் உசேன்பாபுவின் குடும்பத்தினர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User