``8 ஆண்டுகள் உழைத்த பணத்தை வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" - அமைச்சர் கீர்த்தனா
விருதுநகர் க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அப்பள்ளியின் முன்னாள் மாணவியும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனாவுக்குப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் பங்கேற்று மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அமைச்சர் கீர்த்தனா, ``நமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளைக் கூட என்றுமே நாம் கைவிட்டுவிடக் கூடாது. அந்த வாய்ப்புகள் பிற்காலத்தில் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவப் போகின்றன என்பதை நம்மால் கணிக்க முடியாது.
படிப்பது, பட்டம் பெறுவது அதற்குப் பிறகு திருமணம் செய்தவது என இந்தச் சட்டகத்திற்குள்ளேயே நம் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது. பெண்கள் இந்தச் சுழற்சியை உடைத்து வெளியே வர வேண்டும்.

நானும் இதே சுழற்சியில்தான் சிக்கியிருந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குத் திருமணப் பேச்சுகள் தொடங்கின. என்னை பெண் பார்க்கவும் வந்தார்கள். ஆனால், நான் அவர்கள் முன்னாடியே `நான் லண்டன் சென்று படிக்கப் போகிறேன்' என்று துணிச்சலாகக் கூறினேன்.
ஆரம்பத்தில் எனது தந்தை இதற்குப் பெரிய தடையாக இருந்தார். நான் எனது தந்தையை நம்பிக்கையோடு அணுகி, சமூகத்தில் நிச்சயம் முன்னேறிக் காட்டுவேன் என்று தைரியம் அளித்தேன்.
அன்று எனக்குத் தடையாக இருந்த அதே அப்பாதான், பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னபோது எனக்கு ஆதரவாக நின்று போஸ்டர் ஒட்டும் அளவிற்குப் பக்கபலமாக மாறினார். படிப்பை முடித்தவுடன் ரூ.9,600 மட்டுமே சம்பளம் தரக்கூடிய ‘சமூக சேவை’ (Social Service) பணியைத் தேர்வு செய்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏழைப் பகுதியிலிருந்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் சமூக சேவையைத் தேர்ந்தெடுத்தேன்.
அப்போதுதான் எனக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. அரசியலைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக அரசியல் ஆலோசகராக மாறினேன்.

நமது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரப்பெண்மணி மமதா பானர்ஜி என மூன்று வெவ்வேறு மாநில முதலமைச்சர்களிடம் சுமார் 8 ஆண்டுகள் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினேன். இந்த அனுபவம்தான் `நம்மாலும் அரசியலில் சாதிக்க முடியும்' என்ற பெரும் தைரியத்தை எனக்குள் விதைத்தது. 8 ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த பணத்தை வைத்து, வேலையைத் துறந்து அரசியலில் களம் இறங்கினேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)