2026 FIDE: மகுடம் சூடிய வைஷாலி: வெற்றியைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு எழுதியுள்ளார்.
சைப்ரஸில் நடைபெற்ற 2026 பிடே (FIDE) மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், உலக செஸ் மகுடத்திற்கான போட்டியில் தற்போதைய சாம்பியன் ஜூ வென்ஜூனை நேரடியாக எதிர்க்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார்.
கொனேரு ஹம்பிக்கு பிறகு இந்தச் சாதனையைப் படைக்கும் இரண்டாவது இந்தியப் பெண்மணி வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்று மிகுந்த போர்க்களமாகவே அமைந்தது.
கசகஸ்தானின் பிபிசாரா அசாபயேவா தனது ஆட்டத்தை சமன் செய்ததால், வைஷாலிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
அதைப் பயன்படுத்திக்கொண்ட வைஷாலி, ரஷ்யாவின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை கேடரினா லாக்னோவை எதிர்கொண்டார்.
'சிசிலியன் டிஃபென்ஸ்' பாணியில் காய்களை நகர்த்திய வைஷாலி, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு சிப்பாயைக் (Pawn) கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன், 96 சதவிகித துல்லியத்துடன் லாக்னோவை வீழ்த்தி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.
கடந்த ஆண்டுகளில் சில சறுக்கல்களைச் சந்தித்தபோதும், அவரின் தம்பி பிரக்ஞானந்தா மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அளித்த ஊக்கம் அவரை மீண்டும் உலக அரங்கின் உச்சிக்கு கொண்டு வந்துள்ளது.
செஸ் வரலாற்றிலேயே ஓர் அக்காவும் தம்பியும் ஒரே நேரத்தில் கேண்டிடேட்ஸ் தொடரில் இத்தகைய அபாரமான தாக்கத்தை ஏற்படுத்துவது இதுவே முதன்முறை.
தற்போது உலகமே ஜூ வென்ஜூன் மற்றும் வைஷாலி இடையிலான அந்தப் பிரமாண்ட உலகப் பட்டத்திற்கான மோதலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள வைஷாலி, உலக சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியக் கொடியை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டுவார் என்று ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0