ஹூதிகள் தாக்குதல்: ஒவ்வொரு அரண்மனையாக மாற்றிக்கொண்டே இருக்கும் சவுதி இளவரசர்!
வளைகுடாவில் உள்ள ஏமன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படை கிளர்ச்சி அமைப்பான ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் முற்றுகையிட்டுள்ளது. இதையடுத்து ஹூதிகள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அந்நாட்டின் தலைநகரான ரியாத் விமான நிலையத்தில் ஹூதிகள் நடத்திய ஏவுகனைத்தாக்குதலில் ஒரு இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி வசதிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் அமைந்திருந்தாலும், சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் தொடர்ச்சியான ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது.

இதையடுத்து அரண்மனைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பாதுகாப்பதற்காக, சவுதி அரேபியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தி வருவதாக அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உயிரை பாதுகாக்க ஓடும் இளவரசர்
மேலும் ஹூதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பிற கூட்டணி நாடுகளிடம் கூடுதல் இராணுவ உதவியை சவுதி அரேபியா கோரியுள்ளது. அமெரிக்கா இராணுவ ஆலோசகர்களை அனுப்பியுள்ளது. ஹூதிகளின் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், பதுங்கு குழிகளுடன் கூடிய பலத்த பாதுகாப்புள்ள அரண்மனைகளுக்கு இடையே பயணம் செய்து வருகிறார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. 'MBS' என்று அழைக்கப்படும் இளவரசர், தேசிய அளவில் நடந்த இரத்ததான முகாமில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று கலந்து கொண்டார். அதன் பிறகு வெளியில் தென்படவில்லை. பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது நடமாட்டங்கள் குறித்து அறிந்த அதிகாரிகள் கூறுகையில், அவர் மிகத் திறமையான பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு, பலத்த பாதுகாப்பு கொண்ட அரண்மனைகளுக்கு இடையே மாற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)