'நான் முதல்வர் விஜய்யை பாராட்டவே இல்லை!' - வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

Oct 14, 2026 - 17:30
0
'நான் முதல்வர் விஜய்யை பாராட்டவே இல்லை!' - வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற நீதிபதி!

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தமிழக முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதாக தவெகவினர் சமூகவலைதளங்களில் பரப்பி வரும் நிலையில், அந்த நீதிபதி முதல்வர் விஜய்யை தான் பாராட்டவே இல்லை எனக் கூறியிருக்கிறார். மேலும், அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வழக்கிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

CM Vijay
CM Vijay

10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கருத்து கூறும் போது நீதிபதி சஞ்சய் குமார், 'முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது' என அவர் கூறியதாக தவெகவினர் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் செய்த போது அந்தக் கூட்டத்தில் தவெக அமைச்சர் அருண் ராஜூம் உச்சநீதிமன்றமே தமிழக அரசை பாராட்டியிருப்பதாக பேசியிருந்தார். தவெகவினரும் சமூகவலைதளங்களில் நீதிபதியின் கருத்து என அதை பகிர்ந்து பெருமிதம் கொண்டிருந்தனர்.

CM Vijay
CM Vijay

இந்நிலையில் நீதிபதி சஞ்சய் குமார் இன்று பேசுகையில், 'உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கையில், நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்றுதான் பேசினேன். அதை திரித்து தவறாக சித்தரித்து முதல்வர் விஜய்யை பாராட்டியதைப் போல பரப்பினர். தவெகவின் அமைச்சர்களே இதை நம்பி பேசியிருக்கின்றனர். இப்படியொரு நிலையில் செங்கோட்டையனின் தேர்தல் வழக்கு சம்பந்தமாக நான் விசாரிப்பது தார்மீகரீதியாக சரியாக இருக்காது. அதனால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி ஒத்திவைக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User