குஜராத்: "மனைவியைத் தூய்மையாக்குகிறேன்"- கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்ரவதை செய்த கணவன்

Oct 07, 2026 - 11:01
0
குஜராத்: "மனைவியைத் தூய்மையாக்குகிறேன்"- கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்ரவதை செய்த கணவன்

குஜராத் மாநிலம் வாபியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டுவிட்டு அங்குள்ள சொடிலா என்ற இடத்தைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

அவர்கள் கடந்த சில மாதங்களாக அங்கு சேர்ந்து வாழ்ந்தனர். அப்பெண்ணை அவரது கணவர் தேடி வந்தார். அவர் இருக்கும் இடம் குறித்து அப்பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்தது. உடனே அப்பெண்ணின் கணவர் தனது உறவினர்கள் சிலருடன் சென்று தனது மனைவியை அழைத்து வந்து தனது வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.

செயினால் கட்டிப்போட்டு இருந்தார். ஆனால் அப்பெண் மீண்டும் வீட்டில் இருந்து தப்பித்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் கணவர் தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சொடிலா சென்று, இரண்டு பேரையும் அங்குள்ள சுரேந்திரா நகருக்கு அழைத்து வந்து மரத்தில் கட்டி வைத்தனர்.

திருமணம் தாண்டிய உறவு வைத்திருந்ததற்காக அப்பெண்ணை அனைவர் முன்னிலையில் அவரது ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினர். அதனை வீடியோவும் எடுத்தனர். முறையற்ற உறவின் காரணமாகத் தூய்மைப்படுத்தும் சடங்கு செய்வதாகக் கூறி, இக்காரியத்தைச் செய்தனர்.

அதோடு அப்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்து அடித்து உதைத்தனர். அப்பெண்ணின் சிறுநீரை அவருடன் தொடர்பு வைத்திருந்த நபரைக் குடிக்க செய்தனர். அந்த அருவருப்பான காணொளிக் காட்சிகளை அப்பெண்ணின் கணவர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டார். அவை வெளியானதும் இது குறித்து போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அதோடு சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த சமுதாய பெரியவர்களும் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து புகார் செய்யவில்லை.

போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் என 9 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User