'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

Sep 22, 2026 - 14:30
0
'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.

ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐக்கிய ரஷ்யா’ 450-ல் 355 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 57.83 சதவீதம் ஆகும்.

இந்தத் தேர்தலில் சில ஸ்பெஷலான விஷயங்களும் உண்டு...

2022-ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பின் நடக்கும் முதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் இது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

மேலும், இந்தத் தேர்தல் உக்ரைன் போர் மூலம் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளிலும் நடந்தது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ‘தேர்தல்’ என்று சொல்ல முடியாது. தேர்தல் போன்ற செட்டப் என்றே சொல்லலாம்.

காரணம், இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே, இந்தத் தேர்தலின் முடிவு அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

தடை

ரஷ்யாவின் ‘உக்ரைன் போர் வேண்டாம்’ என்று சொல்லும் ஒரே கட்சி - யாப்லோகோ. இந்தக் கட்சியை இந்தத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்துவிட்டது ரஷ்ய உச்ச நீதிமன்றம்.

மற்றபடி போட்டியிட்டிருக்கும் பிற கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லிபரல் டெமோகிரட்டிக் கட்சி, நியூ பீப்பிள் கட்சி ஆகியவை உக்ரைன் போரை ஆதரிப்பவைதான்.

‘உக்ரைன் போரை ரஷ்ய மக்கள் ஆதரிக்கிறார்களா... இல்லையா?’ என்பதை யாப்லோகோ கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

ஆனால், புதின் அரசு தெளிவாக ‘உக்ரைன் போர் வேண்டாம்’ என்கிற ஆப்ஷனை மக்களிடமிருந்து தூக்கிவிட்டது. இதனால் மூலமே, ஐக்கிய ரஷ்யக் கட்சிக்கு ஓரளவு வெற்றி நிச்சயமாகிவிட்டது.

ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன்

அடுத்தது...

அடுத்ததாக, ரஷ்ய தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதல் அதிகரித்தது. இதைக் காரணம் காட்டியும் புதின் கட்சி வாக்குகளை அள்ளியுள்ளது.

போர் ஒரு பக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம், ரஷ்யா தேர்தலையும் முன்னெடுத்தது.

இதன் மூலம், ஓரளவு சாதாரண சூழல் ரஷ்யாவில் நிலவுகிறது என்கிற பிம்பத்தை உலக நாடுகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தியது புதின் அரசு.

மொத்தத்தில் இது உண்மையான தேர்தல் வெற்றியாக அல்லாமல், தேர்தலைப் போன்ற ஒன்றில் புதின் கட்சியின் வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User