மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

Oct 24, 2026 - 15:30
0
மும்பை: தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது; பின்னணி என்ன?

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொகமத் ஹசன் அபு அக்பர் என்ற அந்த நபர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சமூக வலைத்தளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

இது குறித்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை விசாரணை நடத்தி வந்தது. அவர் மும்பை மாகிம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நிற்பதாக தகவல் கிடைத்து. அங்கு தீவிரவாத தடுப்புப் படை சென்றது. அவர்கள் அங்கு நின்ற மொகமத்தைக் கைது செய்தனர்.

மொகமத் அக்தர் ரேபிடோ டிரைவராகவும், தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்பிக்கொண்டு வாசனை திரவியங்கள் விற்பனை செய்பவராகவும் பணியாற்றி வந்ததாகச் சந்தேகிப்படுகிறது.

கைது
கைது

அதோடு எக்ஸ் தளப் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலமுறை ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அக்பரிடமிருந்து அவரது மொபைல் போனைப் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து அக்தரின் பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், ''கடந்த 3 முதல் 3.5 வருடங்களாக அக்பர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை. வெளியில் உட்கார்ந்து பேசுவதைப் பார்த்தேன். இங்கு வாசனை திரவியம் விற்றுவிட்டு இரவில் வேறு இடத்தில் வேலை செய்வார். அவரை ஒரு கெட்ட மனிதனாக நினைக்கவே முடியவில்லை" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User