மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

Oct 02, 2026 - 17:00
0
மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில்  எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வணிகப் பகுதியாக உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு இரவு நேரத்திலும் அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை என பொதுமக்களிடம் இருந்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.,

மருத்துவமனை ஆய்வு

சரவணனுக்கு புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன், நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் ஏரல் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவசர சிகிச்சைக்கு ஏற்கெனவே ஒரு முதியவர் காத்திருந்துள்ளார். அவரிடம் எம்.எல்.ஏ., சரவணன் விசாரித்தபோது, "நான் சிகிச்சைக்கு வந்து அரை மணி நேரமாச்சு. நர்ஸ், டாக்டர்களைக் காணோம். இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் இல்லாததால் இங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.‌ இதனையடுத்து மருத்துவமனையின் பழைய மற்றும் புதிய கட்டடங்களில் உள்ள பல்வேறு அறைகளிலும் தேடியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனடியாகக் காணப்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர்,

மருத்துவமனை ஆய்வு

ஒரு மருத்துவர் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும், அங்கு வந்த செவிலியர் கதவைத் தட்டி மருத்துவரை எழுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கதவைத் தட்டியும் மருத்துவர் வெளியே வராததால், செவிலியர் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெளியே வந்த மருத்துவரிடம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ., சரவணன், "இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இரவு நேரப் பணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் முறையாக பணியில் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்தால் அவர்களின் நிலை என்ன? அவசர சிகிச்சை எவ்வாறு வழங்கப்படும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.‌ இதற்கு மருத்துவர் உரிய விளக்கம் அளிக்க முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஆய்வு

பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் முறையாக மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்திவிட்டு எம்.எல்.ஏ., சரவணன் அங்கிருந்து சென்றார். இதுபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரவு நேர மருத்துவ சேவை முறையாக கிடைக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User