புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

Oct 01, 2026 - 17:30
0
புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நேற்று முன் தினம் அதிகாலை தன்னுடைய வீட்டிலிருந்து தலையில் கீரைக் கூடையை சுமந்தபடி, நகர்ப்புறத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பக்கம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர், `பாக்கறதுக்கு என் அம்மா மாதிரி இருக்கீங்க. தலையில் இவ்ளோ வெயிட் வச்சிக்கிட்டு ஏன் நடந்து போறீங்க?… எங்க போறீங்க….?' என்று கேட்டிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை | சித்தரிப்பு ஓவியம்

அதற்கு அந்தப் பெண், தான் போக வேண்டிய இடத்தைக் கூற, `நானும் அங்கதான் போறேன். வண்டில ஏறுங்க அங்க இறக்கி விடறேன். அதுக்காக ஏன் ஆறு கிலோமீட்டர் நீங்க நடக்கனும்' என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட அந்தப் பெண்ணும், அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தில் ஏறியிருக்கிறார். சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்றதும், சட்டென்று இருள் சூழ்ந்த ஒரு பாழடைந்த பகுதிக்குள் வண்டியை திருப்பினான் அந்த இளைஞர். என்ன நடக்கிறது என்று அந்தப் பெண் சுதாரிப்பதற்குள் `சத்தம் போட்டால் உன்னை இங்கேயே அறுத்துப் போட்டுவிடுவேன்' என்று மிரட்டிய அந்த இளைஞன், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதன் பிறகும் அருவருக்கத்தக்க வகையில் அவர் நடக்க முயற்சித்த போது, பக்கத்து வீட்டில் லைட்டைப் போட்டிருக்கிறார்கள். அதில் அந்த இளைஞனின் கவனம் சில விநாடிகள் சிதறிய நேரத்தில், அங்கிருந்து அறைகுறை ஆடைகளுடன் தப்பித்து உயிர் பிழைத்திருக்கிறார் அந்தப் பெண். அங்கிருந்து தப்பித்த அவர், அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார், இருசக்கர வாகனம் வந்த சாலைகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கணவர் கைது
கைது

அதனடிப்படையில் ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயது தமிழரசன் என்பவரை உடனே கைதுசெய்தனர். இது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``அந்தப் பெண் புகாரளித்த ஒருசில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் கைது செய்துவிட்டோம். அத்துடன் அந்தப் பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தோம். குற்றவாளியின் வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User