``கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து" - முதல்வர் விஜய் அறிவிப்பு

Sep 02, 2026 - 15:00
0
``கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய ஆட்சியாளர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த முடிவின் மூலம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் சில விவசாயிகள் மீது பிரயோகிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் எனக் கூறி போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டு, நிலுவையில் இருக்கும் வழக்குகளும் கைவிடப்படுகின்றன.
அமைதியான வழிப் போராட்டங்களை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நாட்டின் ஜனநாயக உரிமைகளை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. மேலும், சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை இது வலுப்படுத்தும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User