``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

Oct 04, 2026 - 14:30
0
``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.

வயது மூப்பு காரணமாக இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கீதம் சீனிவாசராவ்
சிங்கீதம் சீனிவாசராவ்

இயக்குநரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்தார். அப்போது, ``எங்களுடையது நீண்ட கதை கொண்ட ஒரு பெரிய நட்பு. எங்களின் இந்த நட்பைச் சொல்வதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல. வயது வித்தியாசம் இருந்தாலும், எங்களுக்குள் இருந்த உறவு அத்தகையது. 'இளமையில் மரணம் என்பது மிகவும் பெரிய சோகம்' என்று சொல்வார்கள். சிங்கீதம் அந்த இளமையோடுதான் மாண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவருடைய உடம்பு மட்டும்தான் பழசானது, அவ்வளவுதான்!

நான் அறிந்த மிக இளமையான, சுறுசுறுப்பான இயக்குநர்களில் அவரும் ஒருவர். இதை நான் புதிதாகச் சொல்லவில்லை, எப்போது அவரைப் பற்றிப் பேசினாலும் இதைத்தான் சொல்வேன். ஒரு இளைஞனுக்கோ, முதியவருக்கோ அல்லது எந்த ஒரு கலைஞனுக்கோ அவர் செய்து காட்டிய விஷயங்கள் மிகச்சிறந்த முன்மாதிரியாகும். அவர் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர். இளைஞர்களுடனான தனது தொடர்பின் மூலமும், கலைப் பயணத்தின் மூலமும் மிகப்பெரிய கலைச் செல்வத்தை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

கமல், சிங்கீதம் சீனிவாசராவ்

அவர் இயக்கத்தில் நான் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் முக்கியமானவை. மற்றவர்களுக்கு அவை முக்கியமா இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. என் வாழ்க்கையில் என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கிய பல முக்கிய மனிதர்களில் இவரும் ஒருவர். அவரிடம் கேட்டால் 'கமலிடமிருந்தும் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்' என்பார். அது அவருடைய அடக்கத்தினால் சொல்லப்படுவது மட்டுமல்ல, தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகச் சொல்லும் பண்பு அது. அதுதான் அவருடைய இளமையின் ரகசியம்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User