ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்!

Oct 01, 2026 - 12:00
0
ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். இந்த ரத்த தான முகாமில் பங்கெடுத்த மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் இயங்கும் 'மேரா யுவ பாரத்' அமைப்பை சேர்ந்த ஒருவர், ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில் பெயர், வயது, பயிலும் பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை எழுதி வாங்கியுள்ளார்.

சாதி விவரங்கள் கேட்கப்பட்ட சர்ச்சை

ரத்தம் வழங்கியவர்களிடம் சாதி குறித்த விவரங்களை கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள் சாதி குறித்த விவரங்களை தர மறுத்ததுடன் ரத்ததையும் தானமாக வழங்குவதை தவிர்த்து வெளியேறியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து மாணவர்கள், " ரத்த தானம் செய்வதற்கு எதற்கு சாதி விவரங்கள் எல்லாம் கேட்கிறார்கள்? சாதி பார்த்து தான் ரத்தம் பெறுவார்களா? சாதியை தெரிவித்து தான் ரத்த தானம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படியென்றால் சாதிப் பார்த்து தான் ரத்தம் பெறுவார்களா என்கிற சந்தேகம் எழுகிறது. சில மாணவர்கள் சாதி விவரங்களை வழங்கி ரத்தத்தை தானம் செய்தார்கள். நாங்கள் வெளியேறி விட்டோம்" என்றனர்.

சாதி விவரங்கள் கேட்கப்பட்ட சர்ச்சை

இந்த சர்ச்சை குறித்து ஊட்டி அரசு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, " கல்லூரி தரப்பில் எந்த படிவத்தையும் வழங்கி சாதி குறித்த விவரங்கள் கேட்கவில்லை. இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நீலகிரி மாவட்ட மேரா யுவபாரத் அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளரான ரஞ்சித்குமார் முகாமில் கலந்து கொண்டு மாணவர்களின் சாதி விவரங்கள் உட்பட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களை விநியோகித்து தகவல்களை பெற்றுள்ளார். கல்லூரி முதல்வர் எபனேசர் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User