'ஒருத்தர் 10 பேரின் வேலையை பார்க்கும் நிலை; பணி நியமனத்தில் திமுக.!' - அமைச்சர் நிர்மல்குமார்

Jun 25, 2026 - 12:01
0
'ஒருத்தர் 10 பேரின் வேலையை பார்க்கும் நிலை; பணி நியமனத்தில் திமுக.!' - அமைச்சர் நிர்மல்குமார்

கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. ஆர் நிர்மல்குமார் வெளியிட்டு வருகிறார்.

மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு
மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு

"2001-06 இல் வருவாய் 59,084 கோடியாகவும் செலவு 67,439 கோடியாகவும் இருந்தது. 8,355 கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருந்தது.

கடந்த ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டும், பற்றாக்குறை 933 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 51,000 கோடி செலவினம் அதிகரித்திருக்கிறது.

செலவு அதிகரித்த அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் எதுவும் அதிகரிக்கவில்லை.

மக்கள்தான் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய, கடந்த அரசு மின் துறையை சீரமைக்க ஒன்றுமே செய்யவில்லை.

5 ஆண்டுகளில் ரூ. 34,447 கோடி மின்வாரியத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் இல்லாமலேயே செலவு அதிகரித்திருக்கிறது" என்று நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார்.

மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு
மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு

2001 இல் 6,492 கோடியாக இருந்த மின் துறையின் கடன் இப்போது 2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 87,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருக்கின்றனர்.

மின் துறைக்கு 1,40,635 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நம்மிடம் 74,714 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 65,921 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 16,000 பேர் ஓய்வை எட்டவிருக்கின்றனர்.

பணிநியமனத்தில் 25 ஆண்டுகள் பின் சென்றிருக்கிறது தமிழகம். இந்தத்துறை வளர்ச்சி அடையாமல் போனதற்கு காரணம், கடந்த 25 ஆண்டுகளில் இந்தத் துறை வளர்ந்து வந்த பாதைதான்.

தேவை அதிகரித்தும் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ஊழியர்களின் உயர்வை இரண்டு மடங்கு உயர்த்திருக்க வேண்டும். ஒருத்தர் 10 பேரின் வேலையை செய்ய வேண்டியுள்ளது.

மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு
மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை வெளியீடு

தற்போது மின் ஊழியர்களின் தேவை 1,40, 635. இந்த ஆண்டுக்குள் 20, 449 பேரை பணிக்கு அமர்த்த முதல்வர் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஒரு நாளைய மின் தேவை 21,307 MW.

தமிழ்நாடு மின் துறை உற்பத்தி செய்யும் மின் அளவு - 3,495 MW.

கடந்த 5 ஆண்டுகளில் 122 துணை மின் நிலையங்களை மட்டுமே உருவாக்கியிருக்கின்றனர் " என்றார்.

தகவல்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User