சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

May 08, 2026 - 20:32
0
சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார்.

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஐக்கிய முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக.

விஜய்
விஜய்

நேற்றே காங்கிரஸ் ஆதரவு கொடுத்துவிட்டது. ஏற்கெனவே 107 இடங்களை வைத்திருக்கும் தவெக உடன் காங்கிரஸ் சேர்ந்ததால், அந்த இடங்கள் 112 ஆக உயர்ந்தது.

இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தவெகவிற்கு ஆதரவை வழங்கியிருக்கின்றன. இதனால், 112 + 4 = 116.

விடுதலை சிறுத்தைக் கட்சி ஆதரவு கிடைத்தால் 118 சீட்டுகள் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசிக ஆலோசனை கூட்டம் என்று இழுத்தடித்து தற்போது ஆதரவு வழங்கியுள்ளது.

விசிக இழுத்தடித்த நேரத்தில், முஸ்லீம் லீக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் இரண்டு சீட்டுகளைப் பெற்றது தவெக.

தற்போது ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துவிட்டார் தவெக தலைவர் விஜய்.

ஆக, 120 சீட்டுகளுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால், நாளை விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User