TASMAC: ``இது வெறும் 'எண்' துடைப்பு" - டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Jun 15, 2026 - 23:00
0
TASMAC: ``இது வெறும் 'எண்' துடைப்பு" - டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ரூ.4,000 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. எனினும், குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்க பூரண மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றதும், போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்காக 65 சிறப்புப் படைகளை அமைத்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். மூடப்பட்ட கடைகளின் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், பார்களில் சட்டவிரோத மது விற்பனை தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விஜய்
விஜய்

ஆனால், எந்தெந்தக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு 'வெள்ளை அறிக்கை' கோரிய நிலையில், மூடப்பட்ட கடைகளின் விவரங்களை தமிழக அரசு எண்களாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``கண் துடைப்பு பட்டியலை விடுத்து, டாஸ்மாக் வெள்ளை அறிக்கையை வெளியிடுக! "மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை பல நாட்களாக பூட்டி வைத்து நாடகமாடிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, ஒரு வழியாக நமது தமிழக பா.ஜ.க கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மூன்று பக்கம் கொண்ட ஒரு பட்டியலை இன்று கடமைக்கே என்று வெளியிட்டு இருக்கிறது.

முகவரியுடன் மூடப்பட்ட கடைகளின் விவரங்களையும், அக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கியுள்ள மாற்றுப் பணி விவரத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனும் நமது வலியுறுத்தலுக்கு நேர்மாறாக, எண்களை வாரி இறைத்து, ஒரு பட்டியலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு யாருக்கு என்ன பலன்? இந்த "எண்"துடைப்பு பட்டியலை இன்றே தூக்கி எறிந்துவிட்டு, உடனடியாக தெளிவான முகவரியுடன் கூடிய ஒரு பட்டியலை வெளியிட வேண்டும்! மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள எஞ்சியிருக்கும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அவற்றை மூடுவதற்கான திட்டத்தையும் முதல்வர் திரு. விஜய் அவர்கள் அறிவிக்க வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User