"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saar?" - உதயநிதி கேள்வி

May 26, 2026 - 14:31
0
"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saar?" - உதயநிதி கேள்வி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நேற்று (மே.25) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் பயிர்கடன் தள்ளுபடி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.

தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.

ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User