"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

Apr 15, 2026 - 19:31
 0
"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra

அந்தப் பேட்டியில் அவர், "என் தந்தை ஒரு காலகட்டத்தில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் சிரமப்பட்டார்.

அது எங்களது குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. ஆனால், அந்த இருண்ட காலத்திலிருந்தும், வலிகளிலிருந்தும் நாங்கள் எப்படி மீண்டு வந்தோம் என்பதுதான் முக்கியம்.

எனது தந்தைக்கும் ஹேமமாலினிக்கும் பிறந்த ஈஷா மற்றும் அஹானா தியோலுடன் நான் எப்போதும் ஒரு தூரத்தையே கடைபிடித்து வந்தேன். ஆனால், என் தந்தையின் மறைவுக்குப் பின் எங்களது குடும்பத்தை ஒரே புள்ளியில் இணைத்தது.

அந்தத் துயரம் எங்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கிவிட்டது. வாழ்க்கையில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இறுதியில் குடும்பம்தான் நிலையானது.

பாபி தியோல்
பாபி தியோல்

ஈஷா மற்றும் அஹானாவுடன் இப்போது எனக்கு ஒரு அழகான உறவு இருக்கிறது. நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம்.

கடந்த காலக் கசப்புகளை மறந்துவிட்டு, எதிர்காலத்தை நேர்மறையாகப் பார்க்கக் கற்றுக்கொண்டேன். இப்போது எங்களது குடும்பம் ஒரு முழுமையான மற்றும் மகிழ்ச்சியான இடமாக மாறியிருக்கிறது." எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0