Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

Sep 07, 2026 - 19:31
0
Mani Ratnam: 'நீ இஞ்சி, நான் வெல்லம்!' - ஒளிப்பதிவாளரை மாற்றிய மணி ரத்னம் - 'இஞ்சி வெல்லம்' அப்டேட்!

'தக் லைஃப்' படத்திற்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பை இன்று அறிவித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவின் முக்கியப் பகுதிகளில் நடைபெற்றது.

மணி ரத்னத்தின் இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மானே இசையமைக்கிறார்.

லைகா நிறுவனமும் மணி ரத்னத்தின் 'இந்தியா டாக்கீஸ்' நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதாகத் தெரிவித்த படக்குழு, தலைப்பு பற்றிய சில க்ளூகளையும் தந்தது.

அதை வைத்தே ரசிகர்கள் சிலர் படத்தின் தலைப்பைக் கண்டுபிடித்தனர். தற்போது படக்குழுவினர், தலைப்பை அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு 'இஞ்சி வெல்லம்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

Mani Ratnam
Mani Ratnam

தன்னுடைய ஆஸ்தான ஒளிப்பதிவாளர்கள் இல்லாமல், 'பிங்க்', 'சர்தார் உதம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் அவிக் முகோபாத்யாயுடன் இணைந்திருக்கிறார் மணி ரத்னம்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வரும் எனவும் இந்த அறிவிப்பின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User