Lingam: "குமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை!" - விகடன் டெலிவிஸ்டாஸ் ராதா

Jun 25, 2026 - 12:01
0
Lingam: "குமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை!" - விகடன் டெலிவிஸ்டாஸ் ராதா

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

லிங்கம் | வெப் சீரிஸ்
லிங்கம் | வெப் சீரிஸ்

கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

விகடன் டெலிவிஸ்டாஸ் சார்பாக மேடையில் பேசிய ராதா, "எங்களின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சார் முக்கிய வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருப்பதால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை.

அவர் தன் சார்பாகவும் விகடன் டீம் சார்பாகவும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். விகடன் முதலில் ஹாட்ஸ்டாருடன் இணைந்து செய்திருந்த 'நவம்பர் ஸ்டோரி' வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் விகடன் இணையும் இரண்டாவது கிரியேஷன்தான் இந்த 'லிங்கம்'.

Radha - Lingam
Radha - Lingam

இந்த அற்புதமான வாய்ப்பை அளித்த ஜியோ ஹாட்ஸ்டார் டீமிற்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். 90-களில் கன்னியாகுமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைதான் இது.

'ஜூனியர் விகடன்' இதழில் தொடராக வந்து வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த இக்கதை, இப்போது வெப் சீரிஸாகத் தயாராகியுள்ளது. போலீஸாக வேண்டும் என்று விரும்பிய ஒரு சாதாரண நபர், சூழலால் எப்படி ஒரு பெரிய ரவுடியாக மாறுகிறார் என்பதுதான் இத்தொடரின் கதை.

இதனை இயக்குநர் லட்சுமி சரவணக்குமார் திரையில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் கொண்டு வந்துள்ளார்." எனப் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User