``அவர் உண்மையான பண்பாளர்" - முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா நெகிழ்ச்சி

Jun 25, 2026 - 16:02
0
``அவர் உண்மையான பண்பாளர்" - முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா நெகிழ்ச்சி

நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவில் அவருடைய இறுதி திரைப்படத்தின் திரைப்பட விழாவை நான் நடத்தினேன். நேற்று மாலை, எங்கள் முதலமைச்சரைச் சந்தித்தேன். இதுதான் வாழ்க்கை... கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மாபெரும் ஆளுமையை நான் அறிவேன்… எப்போதும் எனக்குள் தோன்றும் ஒரு விஷயம் — நான் சந்தித்த மனிதர்களிலேயே இவர் முற்றிலும் மாறுபட்டவர்.

அவருடைய திரையுலக நட்சத்திரப் புகழின் காரணமாக அல்ல…. மாறாக, ஏதோவொரு வகையில், தான் இருக்கும் ஒரு அறையில் உள்ள மற்ற ஒவ்வொருவரையும் தன்னை விட மிக முக்கியமானவர்களாக அவர் உணர வைக்கிறார்.

ரம்யா சுப்ரமணியன்
ரம்யா சுப்ரமணியன்

அவர் அனைத்தையும் நினைவில் கொள்கிறார். கூர்ந்து கவனிக்கிறார். அக்கறை காட்டுகிறார். நலம் விசாரிக்கிறார், நமக்கு நம்பிக்கையளிக்கிறார். மென்மைக்கு எப்பொழுதும் மதிப்பளிக்காத இந்த உலகில், அவர் ஒரு உண்மையான பண்பாளர். சற்று தாமதமாக இருந்தாலும், அன்பு, நன்றியுணர்வு மற்றும் பிரார்த்தனைகள் நிறைந்த இதயத்தோடு… இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், என் அன்பிற்குரிய முதல்வர் சி. ஜோசப் விஜய்!

மேலும், தமிழ்நாட்டை வழிநடத்தத் தொடங்கி 40 நாள்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கும் வாழ்த்துகள். நீங்கள் எப்போதுமே மிகச்சிறப்பாகச் செய்யும் ஒரு விஷயத்தை, மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதைத் தொடர்ந்து செய்திட என் வாழ்த்துகள். மற்றவர்களிடம் நீங்கள் எப்பொழுதும் காட்டும் அதே அன்பையும் கருணையையும் இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கும் வாரி வழங்கட்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User