Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Jun 21, 2026 - 12:02
0
Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிடலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

ஸ்பூர்த்தி அருண்

நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதே சமயம்,  தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள். ஒருமுறை தைராய்டு மருந்தின் அளவை மாற்றிய பிறகு,  6 முதல் 8 வாரங்களுக்குப் பின் மீண்டும் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். அது ஒரு நல்ல நிலைக்கு, அதாவது இயல்பான அளவிற்கு (Normal range) வரும் வரை மருந்தின் அளவை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கும்.

நம் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்படுவதற்கு தைராய்டு  என்பது மிகவும் முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும். எல்லாவற்றிற்குமே இது மிக மிக இன்றியமையாதது. எனவே, நீங்கள் திடீரென்று இந்த ஹார்மோன் மருந்தை எடுப்பதை நிறுத்தினால், உடலின் வளர்சிதை மாற்றமே, அதாவது அந்த ஒட்டுமொத்த அமைப்பே (Whole system) சீர்குலைந்துவிடும். இதனால் உங்களுக்குப் பல கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

தைராய்டு ரத்தப் பரிசோதனை முடிவுகள் வழக்கத்திற்கு மாறாக (Abnormal) இருந்தால், மருத்துவர்கள் அந்த மருந்தின் அளவை மாற்றியமைத்துக் கொண்டே (Adjust) இருப்பார்கள்.

ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism), அதாவது தைராய்டு அளவு மிகவும் குறைந்துவிட்டால், நோயாளி கோமா (Coma) நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. 'மிக்ஸெடிமா' (Myxedema) என்று கூறப்படும்  ஆபத்தான நிலையும்  ஏற்படலாம். எனவே, தைராய்டு ஹார்மோன் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்று உங்கள் மருத்துவர் அதைத் தொடங்கியிருந்தால், தயவுசெய்து அதை திடீரென எக்காரணம் கொண்டும் நிறுத்தாதீர்கள்.

தைராய்டு பாதிப்பை குணப்படுத்த வேண்டும், அதாவது ரிவர்ஸ் செய்ய  வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை (Healthy lifestyle), நல்ல உணவுப் பழக்கவழக்கங்கள், வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். இவற்றை முறையாகப் பின்பற்றினால்,  3 முதல் 4 வருடங்களில் சிலருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User