BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' - சாந்தினி தமிழரசன்

Oct 24, 2026 - 13:01
0
BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' - சாந்தினி தமிழரசன்

"நான் பர்சனலா ரொம்ப ஜாலியான பர்சன். ஆனா, வீட்டுல ஆரம்பத்துல லீடர் எக்சிட் இந்த முறை புதுசா வச்சிருந்தாங்க. எனக்கு ஹவுஸ்மெட்ஸ் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பக் கூடாதுன்னு இருந்தது. நான் சினிமாவை விட்டுட்டு வீட்டுக்குள்ள போயிருக்கேன். போன 2 வாரத்திலேயே வெளியில வந்துட்டா என் நிலைமையை யோசிச்சு பாருங்க..அதனால எனக்கு முதல்ல வீட்டுக்குள்ள சர்வைவ் பண்ணனும்னு இருந்துச்சு. அதனால எல்லார்கிட்டேயும் பேசிட்டிருந்தேன். வீட்டிலிருந்து நான் வெளியில வரும்போது எல்லா போட்டியாளர்களும் பேசுனதை கேட்டிருப்பீங்க. வைல்டு கார்டு போட்டியாளர்கள் உட்பட எனக்கு எல்லார்கிட்டேயும் ஒரு கனெக்ட் இருந்துச்சு!" என்றவரிடம் ஜேசன் - சாந்தினி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தது குறித்துக் கேட்டோம்.

chandini

"இது ஸ்டார்டஜி மாதிரி தெரியுதுன்னு சொல்லி ராகவ் சார் என்கிட்ட பேசினார். அவருக்கு முன்னாடி நான் யார்கிட்ட பேசினாலும் யாரோ ஒருத்தர் நீங்க அவர்கூட இருக்கீங்க.. நீங்க தெரியலன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவர் என்கிட்ட பேசும்போது நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன். அதனால அவர் ஜேசன் பத்தி பேசும்போது, எனக்கும் ஜேசனுக்கும் இடையே நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இருந்துச்சு. அவர் ஸ்டார்டஜின்னு லீட் கொடுத்து பேசுனதால நானும் ஆமா ஸ்டார்டஜி தான்னு சொல்லிட்டேன். எனக்கு அப்போதைக்கு அந்த கான்வர்ஷேசனை முடிக்கணும்னு இருந்துச்சு. அதனால அப்படி சொன்னேன்.

நான் ரொம்ப ரியல் ஆன பர்சன். விளையாட்டுக்காக அப்படி ஃபேக் ஆக விளையாடணும்னு எனக்கு இல்ல. 5வது வாரம் பிக்பாஸ் வீட்ல எனக்கு ரொம்ப மோசமான வாரம். ஏன்னா அஸ்மிதா எனக்கு நல்ல ஃப்ரெண்ட் ஆக இருந்தாங்க. அவங்க என் கூட சண்டை போட்டது எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகிடுச்சு. அவினாஷூக்கும் ஜேசனுகும் வந்த சண்டைல அவரும் ஹர்ட் ஆகி இருந்தார். அப்படித்தான் நாங்க ஃப்ரெண்ட் ஆக பேசிட்டிருந்தோம்.

chandini

ஃபேமிலியை விட்டுட்டு தனியா இருக்கோம். நான் ஜேசன் கூட டான்ஸ் ஆடணும்னு ஆசைப்படல. முத்தழகி தான் எங்களை ஆட சொல்றாங்க. அவர் எனக்கு டான்ஸ் ஆடத் தெரியாதுன்னு சொன்னார். அப்ப ஓ பேபி பாட்டு ஆடலாம்னு சொன்னேன். அந்த பாட்டுக்கு அவர் ஆடினப்ப எனக்கு என் கணவர் ஞாபகம் வந்துடுச்சு. அவரை ரொம்ப மிஸ் பண்ணேன். அவரை நினைச்சு ரியலா எமோஷனல் ஆகி அழுதேன். அதை கூட தப்பா பேசுவீங்களா? ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா? நந்தா ரொம்ப ஸ்வீட். அவர்கிட்ட நான் சாரி சொன்னேன். ஏன்னா, ஃபேமிலி ரவுண்ட்டுக்கு அவரை வீட்டுக்குள்ள வர வைக்கணும்னு நினைச்சிருந்தேன். அது முடியலைன்னு சாரி கேட்டேன். அவர்கிட்ட ஜேசன் பத்தி பேசும்போது, ̀நீ என்னைப் பத்தி தானே பேசியிருக்க.. இதுல என்ன இருக்கு?'னு சொன்னார். அவர் மட்டுமில்ல என் ஃப்ரெண்ட்ஸூம் அதைத்தான் சொன்னாங்க. ஒரு பொண்ணு சிரிச்சு பேசுனா தப்பா? நான் ஏன் சிரிக்கக் கூடாது?" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து சாந்தினி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் பண்ணவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User