Air Force One: அமெரிக்காவுக்கு கத்தார் கொடுத்த 'ஆடம்பரப் பரிசு'... சொகுசு விமானத்தின் பின்னணி என்ன?!

Jun 21, 2026 - 12:02
0
Air Force One: அமெரிக்காவுக்கு கத்தார் கொடுத்த 'ஆடம்பரப் பரிசு'... சொகுசு விமானத்தின் பின்னணி என்ன?!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தார் (Qatar) நாடு பரிசாக வழங்கிய அதிநவீன மற்றும் ஆடம்பரமான புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தை வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுத் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். "பறக்கும் வெள்ளை மாளிகை (Flying White House)" என்று ட்ரம்ப் வர்ணித்துள்ள இந்த விமானம், உலகின் மிக ஆடம்பரமான விமானமாக கருதப்படுகிறது.

புதிய விமானத்தின் சிறப்பம்சங்கள்

சுமார் 40 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களின் பயன்பாட்டில் இருந்த பழைய வெளிர் நீல நிற விமானத்திற்குப் பதிலாக, அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் அடர் நீல நிறங்களுடன் இந்த புதிய போயிங் (Boeing) 747-8i சொகுசு விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய விமானத்தை விட இரண்டு மடங்கு பெரியது மற்றும் மிக வேகமாகப் பறக்க கூடியதாகும்.

இதன் உட்புறத்தில் உயர்தர மரவேலைப்பாடுகள், சொகுசான லெதர் இருக்கைகள் என யாரும் பார்த்திராத அளவிலான பிரமாண்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

போயிங் நிறுவனத்தின் புதிய விமான தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, கத்தார் அமீரிடம் இந்த விமானத்தைப் பரிசாக பெற்ற ட்ரம்ப், "ஒரு சாதாரண அதிபர் இப்படியொரு விமானத்தை ஏற்கும் முயற்சியில் இறங்க மாட்டார், ஆனால் நமது நாடு உலக அரங்கில் கம்பீரமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்றும், புதிய விமானங்கள் 2028-ல் தயாராகும் வரை இது தற்காலிக 'பிரிட்ஜ்' (Bridge) விமானமாகச் செயல்படும்” என்றும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

பல நூறு மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானத்தை பரிசாகப் பெற்றது பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த பரிசை நிராகரிப்பது "முட்டாள்தனம்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதன் பாதுகாப்பு மாற்றங்களுக்காக $400 மில்லியனுக்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விமானப்படையின் இறுதிக்கட்ட பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, இந்த விமானம் அடுத்த மாதம் அதிபரின் பயன்பாட்டிற்கு வரும் என்றும், வரும் ஜூலை 4 அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்த புதிய விமானம் வான்வழி அணிவகுப்பில் பங்கேற்கும் என்றும், அடுத்த மாதம் துருக்கியில் நடக்கும் நேட்டோ (NATO) மாநாட்டிற்கு ட்ரம்ப் இதில் முதன்முறையாகப் பயணிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User