`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்
மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மறைந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்கு சென்றது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத் பவார் புதிய கட்சி மற்றும் சின்னத்துடன் இப்போது களத்தில் இருக்கிறார்.
அஜித் பவார் உயிரோடு இருந்தபோது இரண்டு தேசியவாத காங்கிரஸ் அணிகளையும் ஒன்றாக இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விமான விபத்தில் அஜித் பவார் இறந்த பிறகு இப்பேச்சுவார்த்தை தடை பட்டது.
இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க அஜித் பவார் அணியில் சில மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரும் இதற்கு ஆதரவாக இருந்ததால் இணைப்பு பேச்சுவார்த்தை அப்படியே நின்றது. ஆனால் அடிக்கடி இரு அணிகளும் இணையப்போவதாகவும், சரத் பவாரின் அணி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டெ இருக்கிறது.

இந்நிலையில் சரத்பவாரின் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நடந்தது.
இக்கூட்டத்தில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக சரத் பவார் பேசினார். அவர் தனது உரையில், "எங்கள் மாநிலத் தலைவர் முன்னதாகப் பேசுகையில், எங்களுக்குள் சில விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். கட்சியின் தலைவராக நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த விவாதங்கள் எனது தலைமையில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தவை ஆகும். எங்களுடன் இணைய விரும்புபவர்கள் எங்கள் கட்சிக்கே வர வேண்டும். நாங்கள் வேறு யாருடனும் இணைய மாட்டோம். எங்கள் கட்சி ஒரு தனித்த கட்சியாகவே களமிறங்கும். வேறு எந்த கூட்டணியிலும் சேரும் திட்டமில்லை," என்று கூறினார்.
மேலும், ``கட்சியின் முக்கியக் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் மாநிலத்தில் நிலவும் வறட்சிப் பிரச்சினை தொடர்பான விவாதித்ததாகவும், இது குறித்து அடுத்த இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் அரசை அணுகுவோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட வீதிக்கு இறங்குவோம்," என்று அவர் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)