"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

Oct 02, 2026 - 12:00
0
"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போராட்டத்திற்கு மும்பை போலீஸார் ஒப்புதல் கொடுக்கவில்லை.

காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் SIR- எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்தி வைத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் எதிர்கால தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவில் சமூக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாகும்.

இப்போராட்டத்திற்காக அபிஜித் திப்கே நேற்று மும்பை வந்திருந்தார். அவர் நேற்று மாலை மெரைன் டிரைவ் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அபிஜித் அளித்த பேட்டியில், ''தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்த போதிலும், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமையன்று சிவாஜி பூங்காவிலிருந்து அப்போராட்டம் தொடங்கப்படும்.

தேவேந்திர பட்னாவிஸால் சிவாஜி பூங்காவில் அரசியல் பொதுக்கூட்டத்தை நடத்த முடியுமென்றால், நாங்களும் போராட்டம் நடத்த முடியும்.

போராட்டம் என்பது ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயல். அதற்கு அனுமதி தேவையில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த மகாத்மா காந்தி அனுமதி பெற்றாரா? மும்பை போலீஸ் டெல்லி போலீஸ் போன்றது அல்ல. எனவே எல்லாம் சுமுகமாகவே நடக்கும் என்று எனக்குத் தெரியும்" என்றார்.

ஒருவேளை கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "நான் மீண்டும் மீண்டும் வந்து போராடுவேன்" என்று அவர் பதிலளித்தார்.

போராட்டம் நடத்துவதற்கான அனுமதியைக் கோரி ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கேட்டபோது, ​​அத்தகைய விசாரணை நீண்டுகொண்டே செல்லும் என்பதைக் குறிக்க, தீப்கே ஒரு பிரபலமான பாலிவுட் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டினார், அதில், "தேதிக்கு மேல் தேதி, தேதிக்கு மேல் தேதி" என்று குறிப்பிட்டார்.

அதேசமயம் 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் தங்களது அமைப்பு போட்டியிடும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User