காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

Oct 22, 2026 - 17:00
0
காதலனை மாடியிலிருந்து தள்ளி கொன்றாரா சோசியல் மீடியா பிரபலம்? மும்பை மாபியாவில் தஞ்சமான பின்னணி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஸ்ரத்தா துபே. சோசியல் மீடியா பிரபலமான இவர் மேக்அப் கலைஞராகவும் இருக்கிறார். இவரது காதலன் சிவா சர்மா. இவர் பல்வேறு இடங்களில் உணவகங்கள் நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவா சர்மா லக்னோவில் உள்ள தனது காதலி ஸ்ரத்தா துபேயின் வீட்டிற்குச் சென்றார். அங்கு இருந்தபோது சிவா சர்மா 4வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். அவர் கீழே விழுந்து இறந்த பிறகு ஸ்ரத்தா சர்மா தலைமறைவாகிவிட்டார்.

அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். முதலில் லக்னோவில் இருந்து நேபாளத்திற்குத் தப்பிச்சென்றார். அங்கிருந்து மீண்டும் லக்னோவிற்கு வந்த ஸ்ரத்தா அங்கிருந்து ஆக்ரா, ஜான்சி வழியாக மகாராஷ்டிராவின் நாக்பூருக்குச் சென்றார். ஸ்ரத்தாவுடன் அவரது சகோதரி ரேஸ்மா மற்றும் டிரைவர் டேனீஷ் ஆகியோரும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.

அவர்களின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்த சிறப்புப் படை போலீஸார் அவர்கள் நாக்பூரில் பதுங்கி இருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்லத் திட்டமிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மும்பையில் செயல்பட்டு வரும் 'இசட்' மாபியா கும்பல் நாக்பூரில் ஸ்ரத்தாவிற்கு அடைக்கலம் தருவதாக உறுதியளித்து.

அவர்களுக்கு ஒரு பண்ணை வீட்டில் தங்கும்படி அழைத்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் பண்ணை வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு போலீசார் அவர்களது இருப்பிடத்தைக் கண்காணித்து கைது செய்தனர்.

ஜுல்பிகர் கும்பல் என்றும் அழைக்கப்படும் 'Z' கும்பல், தாவூத் இப்ராஹிமின் டி-கும்பல் போன்று செயல்பட்டதாகவும், மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதோடு இக்கும்பல் பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததாகவும், அதற்கு ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரத்தாவிடம் இருந்து 3 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரத்தா தன்மீதான கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், அவற்றை அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளார். சிவா சர்மா தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் ரூ. 20 லட்சம் கடனில் இருப்பதாகவும், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவரது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகப் பேசியதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User