"ஈரான் தலைவர்கள் உயிரோடு இருப்பதே இந்தப் பேச்சுவார்த்தைக்காக தான்" - ட்ரம்ப்

Apr 11, 2026 - 09:32
 0
"ஈரான் தலைவர்கள் உயிரோடு இருப்பதே இந்தப் பேச்சுவார்த்தைக்காக தான்" - ட்ரம்ப்

இன்று இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு மற்றும் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தலைமையிலான குழு சந்தித்து கொள்கின்றனர்.

இந்தச் சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இதுவரையிலான கருத்துகள்...

ட்ரூத் பக்க பதிவு

"சர்வதேச நீர்வழிகளைப் பயன்படுத்தி உலகை குறுகிய காலத்திற்கு மிரட்டிப் பணம் பறிப்பதைத் தவிர, தங்களிடம் வேறு வழிகள் இல்லை என்பதை ஈரானியர்கள் இப்போது உணர்ந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்!"

ஈரான் போர்
ஈரான் போர்

பத்திரிகையாளர்களிடம் பேசும்போது...

"ஜே.டி.வான்ஸிற்கு என் வாழ்த்துகள். அவர் மிகப்பெரிய காரியத்தை செய்ய இருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்பேன்.

ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இப்போது நாம் ஒரு ஒப்பந்தத்துடனோ, அது இல்லாமலோ வளைகுடாவை (ஹார்முஸ் ஜலசந்தியை) திறக்கப் போகிறோம்.

இது மிக விரைவில் நடக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றாலும், வேறு வழியில் அதை நடத்துவோம்.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவர்களது கடற்படை... விமானப்படை போய்விட்டது,

தலைவர்கள் போய்விட்டனர்... அந்த இடம் முழுவதுமே போய்விட்டது.

எனவே, இது எப்படி முடிகிறது என்று பார்ப்போம்".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0