Lingam: "எல்லாரும் என்னை 'OTT Hero'னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க" - 'லிங்கம்' குறித்து கதிர்

Jun 25, 2026 - 13:31
0
Lingam: "எல்லாரும் என்னை 'OTT Hero'னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க" - 'லிங்கம்' குறித்து கதிர்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் பற்றி படக்குழுவினர் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

லிங்கம் | வெப் சீரிஸ்
லிங்கம் | வெப் சீரிஸ்

கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கதிர் பேசுகையில், "ஒரு படம் முடிஞ்சாலே அடுத்து என்ன படங்கள் இருக்குனு கேட்கத் தொடங்கிடுவாங்க. அப்படியான கேள்விகளுக்குக் காத்திருக்கும் மனநிலையும் நமக்கு உருவாகிடும்.

'நமக்கு கமர்சியல் சென்ஸே இல்லையா'னு டவுட் வரும்போதுதான் இந்த ஓடிடி சான்ஸ் கிடைச்சது. இப்போ எல்லாரும் என்னை 'ஓடிடி ஹீரோ'னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இதை நான் நேர்மறையாகத்தான் எடுத்துப்பேன். 'சுழல் 1 & 2', 'லிங்கம்' என ஒவ்வொரு சீரிஸும் தியேட்டர் படம் மாதிரியான தரத்தில் இருக்கும்.

கதிர் - லிங்கம்
கதிர் - லிங்கம்

அதனால ஓடிடில ரெண்டு சீரிஸ் பண்ணா, நாலு படம் நடிச்ச கணக்குன்னு என்னை நானே தேத்திக்கிறது வழக்கம். தியேட்டர் ரிலீஸ் அன்னைக்கு மக்கள், பத்திரிகையாளர்களுடைய ரியாக்ஷனை நேர்ல பார்க்கிற அந்த ஃபர்ஸ்ட் டே சந்தோஷமே தனிதான்.

மத்தபடி நடுவுல இருக்குற ப்ராசஸ் எல்லாம் நம்மள போட்டு உருட்டி எடுத்துரும். 2022-ல இயக்குநர் லக்ஷ்மி சார் வந்து 'லிங்கம்' கதையைச் சொன்னார். என் மேல நம்பிக்கை வச்சு இந்தக் கேங்ஸ்டர் கேரக்டரைக் கொடுத்தாரு.

என் முகம் சாஃப்டா இருந்தாலும், எந்தக் கேரக்டரை என்னால மாஸா பண்ண முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User