Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" - ஷங்கர் மகாதேவன்

Apr 13, 2026 - 14:33
 0
Asha Bhosle: "அவரின் இசை இந்த பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை இருக்கும்" - ஷங்கர் மகாதேவன்

பிரபல பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

இவருக்கு 92 வயது. 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Shankar Mahadevan
Shankar Mahadevan

இந்நிலையில் பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன் ஆஷா போஸ்லே பற்றி பகிர்ந்திருக்கிறார்.

இவர், ஆஷா போஸ்லேவுடன் ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் ‘செப்டம்பர் மாதம்’ பாடலைப் பாடியிருக்கிறார்.

ஆஷா போஸ்லே பற்றி ஷங்கர் மகாதேவன், “இப்போது நான் உணர்வதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இதயம் உடைந்து போயிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அவரும், அவரது இசையும் இந்தப் பூமியில் மனிதர்கள் இருக்கும் வரை அழியாமல் இருப்பர். அவரது பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

அவர் என்றும் வாழ்வார். நமது போன்களிலும், டிவியிலும், இசை ஒலிக்கும் ஒவ்வொரு ஊடகத்திலும் அவரது அற்புதமான குரல் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே

அவர் இப்போது இன்னும் சிறந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

அவர் நம்மை ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார். தனது நேர்மறை மற்றும் உற்சாகமான ஆற்றலை நமக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார். அவரது கை எப்போதும் நமது தலையின் மீது ஆசீர்வாதமாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0