வாகை சந்திரசேகர்-க்கு சங்கீத நாடக அகாடமி (Akademi Puraskar) விருது; விரிவான தகவல்கள்...

Jun 16, 2026 - 12:30
0
வாகை சந்திரசேகர்-க்கு சங்கீத நாடக அகாடமி (Akademi Puraskar) விருது; விரிவான தகவல்கள்...

கலைத்துறையில் ஒரு கலைஞன் தனது வாழ்நாளில் பெறும் மிக உயரிய தேசிய அளவிலான அங்கீகாரமாக சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi) கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாக நாடக மேடைகளிலும், வெள்ளித்திரையிலும் தனது எதார்த்தமான நடிப்பால் மக்களைக் கவர்ந்த வாகை சந்திரசேகரின் ஒட்டுமொத்த கலைச் சேவைக்காகவே இந்த மாபெரும் கௌரவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

வாகை சந்திரசேகர்
வாகை சந்திரசேகர்

ஜூன் 10, 2026 அன்று இந்தியக் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி, 2024-25ம் ஆண்டுகளுக்கான விருதுகளை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த அகாடமி விருது (Akademi Puraskar) பெறுபவர்களுக்குத் தலா ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பரிசும், தாமிரப் பட்டயமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.

இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக் கலைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் நாடெங்கிலும் இருந்து 108 சிறந்த கலைஞர்கள் இந்த விருதுக்காக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறப்பு விழா ஒன்றில் வழங்கப்பட உள்ளன.

இந்த விருது பெற்றுள்ள வாகை சந்திரசேகர் 1956, மே 3-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'வாகைகுளம்' என்ற கிராமத்தில் பிறந்தவர். நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளில் சிறுவயது முதலே தீவிர ஆர்வம் கொண்டு, 1980-களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ழ்

Akademi Puraskar
Akademi Puraskar

இவரது நடிப்புத் திறனைப் பாராட்டி 1991-ம் ஆண்டு தமிழக அரசு மிக உயரிய 'கலைமாமணி' விருதை வழங்கியது. மேலும் 2002-ல் வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார்.

பல முன்னணி தமிழ்ச் செய்தி ஊடகங்கள் இவருக்கு `யுவ புரஸ்கார்’ (Yuva Puraskar) விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால், அகாடமியின் விதிமுறைப்படி 'யுவ புரஸ்கார்' என்பது 40 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். மூத்த கலைஞரான வாகை சந்திரசேகருக்கு, அவரது வாழ்நாள் பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக அகாடமியின் பிரதான விருதான இந்த Akademi Puraskar வழங்கப்படுகிறது.

2021-ம் ஆண்டு முதல் 'தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்' தலைவராகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவராகவும் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்து வருகிறார். மாநில அளவில் கலைகளைப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பில் உள்ளவருக்கு, தேசிய அளவிலான இந்த உயரிய விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

வாகை சந்திரசேகர்
வாகை சந்திரசேகர்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது அசாத்தியமான நடிப்புத் திறனால் முத்திரை பதித்த வாகை சந்திரசேகருக்கு, சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்திருப்பது அவரது கலைப் பயணத்தில் சூடப்பட்ட மற்றொரு மகுடம்.

பாரம்பரியக் கலைகளையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் அவரது தற்போதைய பணிகளுக்கு இந்த அங்கீகாரம் மேலும் பலம் சேர்க்க நாம் அனைவரும் வாழ்த்துவோம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User