தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் (நேற்று) இரவில் வெளியான அந்த வீடியோவில், தேர்தல் செலவுகள் மற்றும் கட்சி மாற்றம் குறித்து சத்யபாமா பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த வீடியோவில், ``கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வேற வழியில்லாமல் த.வெ.கவில் சேர்ந்துள்ளேன். இங்கு சாப்பாட்டுக்காக மட்டுமே 15 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளேன்" என்று அவர் பேசுவது போல அதில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சுப்பொருளாக மாறியது.
இந்த நிலையில், இன்று காலை பொள்ளாச்சி அருகிலுள்ள கொண்டமநாயக்கன்பாளையம் பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்துவிட்டு வெளியே வந்த சத்யபாமாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்விகளை எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தவெக வேட்பாளர் சத்யபாமா, ``ஆரம்பத்தில் இருந்தே எல்லாமே சித்தரிப்புதான். அதேபோல இந்த வீடியோவும் முற்றிலும் சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும். எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய் வீடியோ இது. எனது வெற்றி வாய்ப்பை சீர்குலைப்பதற்காகவும், என்னை வீழ்த்துவதற்காகவும் திட்டமிட்டு இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள். அதில் உண்மை எதுவும் இல்லை. எனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

அதனால் ஏற்படும் அச்சத்தினாலேயே எதிர்த்தரப்பினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த வீடியோவை பின்னணியில் இருந்து யார் தயாரித்து வெளியிட்டார்கள் என்பதைக்கூட எங்கள் தரப்பில் கண்டறிந்துவிட்டோம். விரைவில் அவர்கள் மீது சட்டப்பூர்வமாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)