பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

Apr 14, 2026 - 19:33
 0
பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.

விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிடப் போகிறோம். அதற்கு முன்பாக சில வாக்குறுதிகளை இங்கே பகிர்கிறேன்.

விஜய்

நெசவாளர்களின் தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்ய அரசு சார்பில் ஒரு இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

முக்கிய நகரங்களில் வெற்றித் தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பங்களுக்கு வருடம் 30,000 ரூபாய் வழங்கப்படும்.

கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்களாகவும் விசைத்தறிகளுக்கான மின்சாரம் 1500 யூனிட்களாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

நெசவாளர்களுக்கு 10 லட்சம் ஆயுள் காப்பீடு. நெசவாளர்களுக்கான ஓயவூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும்.

இந்திய அளவில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2 வது இடத்தில் இருக்கிறது. இந்தப் பெருமை திமுக அரசையே சாரும்.

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கான Peak Hour மின்சாரக் கட்டணத்தை நிறுத்தி வைப்போம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு MSME நிறுவனங்களுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.

Vijay
Vijay

5 ஏக்கருக்கு குறைவான நிலமுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடன் ரத்து செய்யப்படும்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு 3500 ரூபாயும் கரும்புக்கு ஒரு டன்னுக்கு 4500 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும்.

பயிர் காப்பீட்டின் மூலம் பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கனிவோடு பரிசீலிப்போம்.

5 ஆண்டுகளுக்கு மேல் பண்புரியும் அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர்கள் போன்றோருக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.

பணி மாறுதலுக்கு பணம் பெறும் முறை இருக்காது.

காவலர்களின் அடிப்படை மாத ஊதியத்தை 18,200 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாக உயர்த்தப்படும்.

விஜய்
விஜய்
விஜய்
விஜய்
விஜய்
விஜய்
விஜய்

காவலர்களின் பணி நேரம் முறைப்படுத்தப்படும். வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி விடுப்பு அளிக்கப்படும். சலவைப்படி 1000 ஆக உயர்த்தப்படும்.

மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவையில் காவலர்நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

பெண் காவலர்களுக்கென தனி ஓய்வு அறைகளும் நடமாடும் கழிப்பிடங்களும் அமைக்கப்படும்.

உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்த மட்டுமே வந்திருக்கிறேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றமாட்டேன்.' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0