SRH Vs RR: "இந்த வெற்றிக்கு எங்களின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம், ஏனென்றால்.!"- இஷான் கிஷன்

Apr 14, 2026 - 08:31
 0
SRH Vs RR: "இந்த வெற்றிக்கு எங்களின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம், ஏனென்றால்.!"- இஷான் கிஷன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் இஷான் கிஷன், " இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு 2 புள்ளிகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

SRH vs RR match

பந்துவீச்சாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு, திட்டங்களைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதை அவர்கள் சிறப்பாகச் செய்தார்கள். இந்த வெற்றி பந்துவீச்சாளர்களையே சேரும். இளம் பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

பந்துவீச்சுப் பயிற்சியாளர் வருண் ஆரோனுடன் இணைந்து அவர்கள் நிறையப் பயிற்சிகளை மேற்கொண்டதோடு, அனுபவம் வாய்ந்த வீரர்களிடமும் ஆலோசனைகளைக் கேட்டனர்.

எங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஒரு கேப்டனாக, கீப்பிங் செய்யும்போது பந்துவீச்சாளர்களுடன் கலந்துரையாடுவதில் சில சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தேன்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

பீல்டிங்கைச் சரியாக அமைப்பதற்கும், பந்துவீச்சாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை உடனுக்குடன் வழங்குவதற்கும் களத்தில் அவர்களுடன் நேரடியாக இருப்பது அவசியமாகிறது.

அந்தத் திட்டம் எங்களுக்கு நன்றாகக் கை கொடுத்தது. வரும் போட்டிகளிலும் இதையே தொடருவோம்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0