ஜூ.வி மெகா சர்வே: `பி.டி.ஆர் vs சுந்தர்.சி' போட்டி களம்! - சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டம் யாருக்கு?

Apr 18, 2026 - 11:02
 0
ஜூ.வி மெகா சர்வே: `பி.டி.ஆர் vs சுந்தர்.சி' போட்டி களம்! - சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டம் யாருக்கு?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

அதன் அடிப்படையில், மதுரை மத்தியத் தொகுதியில் தி.மு.க-வில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர்.சி, நா.த.க-வில் அப்துல் ஹக்கிம், த.வெ.க-வில் வி.எஸ்.எம் முஸ்தபா போட்டியிடுகின்றனர்.

மத்திய மதுரை

சுந்தர்.சி, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டாலும் வெளியூர்க்காரர், நடிகர் என்பதால் எளிதாக அணுக முடியாதோ என்கிற பிரச்னையால் தொகுதி மக்கள் இன்னும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். பி.டி.ஆருக்கு எதிராக உள்கட்சிப் பூசல் இருந்தாலும் தொகுதி மக்களிடையே இருக்கும் செல்வாக்கால் முன்னேறிச் செல்கிறார்.

இதேப் போல காரைக்குடியில் மாங்குடி, சீமான், திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கையில் நடிகர் கருணாஸ், மதுரை தெற்கில் ராம சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி உதயகுமார் என சிவகங்கை - மதுரை - தேனி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் சர்வே முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0